மானியத்துடன் கடன் வழங்கும் தமிழக அரசு!! இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் இதோ!!

Photo of author

By Madhu

மானியத்துடன் கடன் வழங்கும் தமிழக அரசு!! இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் இதோ!!

Madhu

tamil-nadu-government-provides-loans-with-subsidies

தமிழக அரசு இளைஞர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருவதினால் அவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. தற்போது அரசு வேலைக்காக படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. ஆனால் அரசு வேலை பெரும்பாலானவருக்கு எட்டாக்கனியாக மாறி வருகின்றது. அதனால் தமிழக அரசு இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக (unemployed youth employment generation program) என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது சொந்த தொழிலை தொடங்குவதற்காக இந்த திட்டம் பயன்படுகின்றது. பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் சுய தொழிலை மேம்படுத்துவதற்காகவும் இத்திட்டம் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் மூலமாக தகுதி உடைய இளைஞர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகின்றது. மேலும் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக அதாவது 2.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதால் இளம் தொழில் முனைவோர் மீதான நிதி சுமை குறைக்கப்படும். படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை குறிப்பாக சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள இளைஞர்களுக்கு இத்திட்டம் சுய தொழிலை மேம்படுத்த மிகவும் உதவியாக உள்ளது.

UYEGP திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 35 வரை மட்டுமே பொது பிரிவு விண்ணப்பிக்க முடியும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவினருக்கு 45 வயதுக்கு கீழ் வயதுவரம்பு நீடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்பது அவசியம். பொருளாதார ரீதியாக அல்லது பின்தங்கியுள்ள இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் இத்திட்டத்திற்கு ஒரு சில வரைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.