தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.
தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு பழைய ஓய்வூதி திட்டம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரவில்லை என பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகா மற்றும் பஞ்சாபில் அடுத்தடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 13,000 ஊழியர்களுக்கு கர்நாடகாவில் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பஞ்சாபில் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பஞ்சாபில் சுமார் 2500 அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் மீண்டும் இணைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2004 ஜனவரி மாதத்திற்கு முன்னர் வரை பதவிக்கு சேர்ந்த மற்றும் பதவியில் சேர நியமன ஆணை பெற்றவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு ஓபிஎஸ் அல்லது புதிய வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என இரண்டு திட்டத்தில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் எந்த ஓய்வூதிய ஓய்வூதிய திட்டத்தையும் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர்கள் என்பிஎஸ்ஐ தேர்ந்தெடுத்ததாக கருதப்படுவார்கள்.
மேலும் தமிழகத்தில் இந்த திட்டம் அமலுக்கு வருமா என பலரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என கூறப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தற்போது ஆலோசனைகள் மேற்கொண்டு வரும் நிலையில் அதற்காக தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தின் கடைசியிலேயே அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் மற்றும் அகவிலைப்படி உயர்வு கோரிக்கைகள் ஏற்பு என பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகின்றது. அதில் ஒன்றாக பழைய ஓய்வூதியம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில் அரசுக்கு நிதிய இழப்புகள் ஏற்படலாம் நிதி இழப்புகளை குறைக்கும் வகையில் திட்டத்தில் ஒரு சில மாற்றங்களை செய்த பிறகு தமிழக அரசு இத்திட்டத்தை அமல்படுத்தும் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீதம் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கும் நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை தற்போது நிறைவேற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலின் பொழுது திமுகவிற்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தனர். அவர்களின் ஆதரவு பாஜக மற்றும் அதிமுகவிற்கு மாறியது. கடந்த தேர்தலில் தபால் வாக்குகளை அளிக்கும் அரசு ஊழியர்கள் பாஜக மற்றும் அதிமுகவிற்கு வாக்களித்ததாக கூறப்படுகின்றது. அதனால் அரசு ஊழியர்களை தன் வசப்படுத்துவதற்காக பழைய ஓய்வூதிய திட்டம் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் கொண்டு கொண்டுவர திட்டமிட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாநில அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாநில அரசு பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநில அரசு பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 2003 ஏப்ரல் மாதத்திற்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில அரசு பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வு திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது.
பழைய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு குழு அமைத்திட அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த குழுவினர் மாநில அரசின் நிதி நிலைமை, பணியாளர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரை ஆணை அளிக்க குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் இந்த வருடம் இறுதிக்குள் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரலாம் என பலரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.