புதிய விசா கோரிய மாணவர்களுக்கு வைத்த செக்! புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா!!

0
8

அமெரிக்கா அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப அங்குள்ள இளைஞர்களின் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றார். மேலும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் விசா குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை தற்போது கடுமையாகப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா பல்கலைக்கழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து செல்பவர்கள். இந்நிலையில் வெளிநாட்டு புதிய விசா மாணவர்களின் நேர்காணல்கள் நிறுத்தி வைக்கும்படி அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புதிதாக விசா கோரி உள்ள மாணவர்களின் பேஸ்புக், எக்ஸ் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை சோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் பயங்கரவாத ஆதரவு காணப்பட்டால் அவர்களுடைய விசா மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புதிதாக விசாவிற்கு கோரி உள்ள மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் அமெரிக்க மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் படிப்பை கவனிக்காமல் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் மாணவர்கள் மிகவும் அவதியடைவதாக கூறப்படுகின்றது.

Previous articleதிருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றம்.. கோவில் நிர்வாகம் அளித்த விளக்கம்!!
Next article“வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!” – அன்புமணி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ராமதாஸ்