மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா; மாணவர்களை சந்திக்க தயாரான தவெக தலைவர் விஜய்!

0
102

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதே மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

தற்போது தொகுதி வாரியாக மக்களுக்கு தனது தொண்டர்கள் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் பரிசு பொருள் வழங்கி வருகின்றார்.

இரண்டு கட்டங்களாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. கடந்த 30ஆம் தேதி முதல் கட்டமாக மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து சான்றிதழ் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு ஜூன் நான்காம் தேதி இரண்டாம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

தற்போது மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி வாரியாக மாணவ மாணவிகளின் லிஸ்ட் எடுத்து தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக பிரித்து மாணவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து விருது வழங்கிய வருகின்றார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.

Previous articleவிவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!
Next articleநான் சொல்வதை கேட்டால் பதவி.. அன்புமணிக்கு கெடு வைத்த ராமதாஸ்!!