நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

0
115

தமிழக அரசு சார்பாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சியும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கிய அடித்தளமாக உள்ள நிலையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வர பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.

மேலும் உயர் பதவிக்கான தேர்வான குடிமைப்பணி தேர்வுக்கு தமிழக அரசு பயிற்சி வழங்கி வருவது மட்டுமின்றி ஊக்கத்தொகையும் வழங்குகின்றது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் சென்னையில் உள்ள அகில குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய இந்திய தேர்வாணையத்தால் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மாதிரி ஆளுமை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு, கணினி மையமாகப்பட்ட நூலகம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதனால் பயிற்சி பெறுபவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் நிலையில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குடிமை பணி முதல் நிலை தேர்வில் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வில் எழுதிய தேர்வர்களில் 98 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இவர்களில் 26 பெண் ஆர்வலர்களும் இரண்டு மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 3 மாதங்களுக்குப் பிறகு முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட இருக்கின்றது. அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் குடிமை பணி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அவர்களுக்கு பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கு ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் ரூபாய் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவிவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; நெல் கொள்முதல் விலை இனி இதுதான்!
Next articleஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!