அமைச்சரவையில் பங்கு..அதிகாரத்தில் பங்கு; திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!

0
112

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வரும் நிலையில் கூட்டணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வரும் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் கட்சிகள் உறுதியாக இருக்கின்றனர்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வழக்கத்தை விட குறைவாக மதிமுக, விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஆறு தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் விருப்பம் இல்லாவிட்டாலும் ஆறு தொகுதிகளை பெற்றுக்கொண்டோம் இந்த முறை கண்டிப்பாக கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுகவிடம்  கேட்போம் என சிபிஎம் மாநில செயலாளர் பேஸ் சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.

விசிக தலைவரும் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பெறுவோம் எனவும் கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணியில் இருப்போம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வைகோவுக்கு மாநிலங்களவை சீட்டு மறுக்கப்படுவதை காரணம் காட்டி கூடுதல் சீட்டு கேட்க உள்ளதாக மதிமுக தரப்பில் கூறப்படுகின்றது காங்கிரஸ் 2011 சட்டமன்றத் தேர்தலில் 63 இடங்களிலும் 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களிலும் போட்டியிட்டது.

ஆனால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 25 இடங்கள் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் 18 இடங்களில் வென்று காட்டியது. இந்நிலையில் காங்கிரசும் கூடுதல் தொகுதி கேட்கலாம் என்ற சூழல் நிலவுகின்றது.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்பொழுது அமைச்சரவையில் பங்கு வேண்டும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நிச்சயம் கோரிக்கை வைப்போம் எனவும் தெரிவித்துள்ளனர். திமுகவை வீழ்த்தி காட்டுவோம் என அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளன இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்து வருகின்றன தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெற நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

Previous articleஇனி இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்காது; ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!
Next articleபாஜக வசம் செல்லும் மதிமுக; கூட்டணி கலையுமா..குழப்பத்தில் தவிக்கும் திமுக!