மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; 4 சதவீதம் ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு!

0
46

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அவர்கள் கூறி இருப்பதாவது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ் மதுமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் அரசு பணிகளில் பதவி உயர்வின் பொழுது மொத்தமுள்ள பணியிடங்களில் நான்கு சதவீதத்திற்கு குறைவில்லாத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். மேலும் அதற்கான உரிய சட்ட திருத்தங்கள், மாற்றுத்திறனுக்கான உரிமைச் சட்டம், 2016 இல் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வை திறன் உடையவர்கள், செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைந்த அளவு ஒளியை உணரும் திறன் பெற்றவர்கள், சக்கர நாற்காலிகள் உதவியுடன் தினசரி வாழ்வை நகர்த்துவோர், கற்றலில் குறைபாடு, மனம் மனநல பாதிப்பு உடையோரை மாற்றுத்திறனாளிகளாக கருதி பதவி உயர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வு தொடர்பான அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக துணை குழுக்களை அமைக்க முன்னதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த துணைக் குழுவின் மூலம் அறிக்கை அஈசுக்கு அனுப்பப்பட்டு உயர்நிலைக் குழுவின் பரிசோதனைக்காக எடுக்கப்படும். இந்த குழு மனிதவள மேலாண்மை துறைச் செயலரை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் உயர்நிலை குழு பரிந்துரைக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleஅதிமுக தவெக மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை? முன்னாள் அமைச்சர் கூறிய சீக்ரெட்
Next articleபான் கார்டில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!