விசிக கூட்டணி; காரசாரமான பதிலை அளித்த திருமாவளவன்!

0
23

விசிக தலைவர் திருமாவளவன் அரியலூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலமாக திருச்சி வந்தடைந்தார். விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

அதில் அரசியல் சூழல் குறித்து செய்தி அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு தொல் திருமாவளவன் பதில் அளித்தார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது போன்ற யூகமான கேள்வி தற்போது கேட்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் பாஜக, பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என ஒரு நிலையான நிலைப்பாடு, எடுத்திருக்கின்றோம் குறைந்த தொகுதி கொடுத்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம் என கூறுவதால் எங்கள் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள் அதனால் அவர்களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி வைத்திருக்கிறோம்

தொகுதி எண்ணிக்கை குறித்து எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது, இனியும் வராது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தெரிய வரும்.

இந்த முறை பேச்சுவார்த்தையின் போது நல்ல பலன் இருக்கும் என எதிர்பார்க்கின்றோம். திமுக கூட்டணியை மட்டுமே குறிவைத்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். இது தேவையா என பதிலளித்துள்ளார், திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் புல்லட்டில் லாரன்ஸ் கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, விசிக, உள்ளிட்ட கட்சிகளிடம் கூட்டணி குறித்து அதிகளவு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் விசிக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு காரசாரமான பதிலை தொல் திருமாவளவன் வழங்கியுள்ளார்.

Previous articleரோஹித் சர்மாவுடன் அறையை பகிர்ந்த ஷிகர் தவான் – காதலியை ரகசியமாக அறைக்குள் அழைத்த கதை!
Next articleஅரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!