இது மட்டும் நடந்தால் எடப்பாடி பதவி அதோகதி தான்.. செங்கோட்டையன் வைக்கும் செக்!!

0
925
If only this happens, Edappadi's position will be ruined.
If only this happens, Edappadi's position will be ruined.

ADMK: சமீபத்தில் நடைப்பெற்ற அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரம் மேற்கு மண்டலத்தில் தொடங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க அமைச்சர்கள் மட்டுமல்லாது பா.ஜ. க அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த பயணம் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை வலுப்படுத்தும் நோக்குடன் நடந்து வருகிறது. ஆனால் இந்த பேரணியில் மேற்கு மண்டலத்தில்  முக்கிய தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்தும் அவர் கலந்துக்கொள்ளவில்லை.

மேற்கொண்டு செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா, எம். ஜி.ஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தையும் வைத்துள்ளார். இது அவர் தி.மு.க உடன் கூட்டணியில் சேர வாய்ப்பிருப்பதை காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் பா.ஜ.க அரசை சீண்டும் நோக்கத்தோடு வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மற்றொரு பக்கம் வேறு கதையானது உலா வருகிறது. அதாவது ஒ. பன்னீர்செல்வம் , சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியிலிந்து நீக்கியதிலிருந்தே ,கட்சி வலுவிழந்து காணப்படுவதாக செங்கோட்டையன் வேதனை தெரிவித்திருந்தார்.

அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தால் அ.தி.மு.க விற்கு பலம் கிடைக்கும் என்று எண்ணுகிறார். இதனை எடப்பாடியிடம் தெரிவித்த போது அவர் அதை ஏற்க மறுத்ததாக சிலர் கூறுகின்றனர். தனது தலைமை பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தினால் அவர் இதனை மறுப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  ஆனால் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் விரும்புவது அ.தி.மு.க வின் முன்னேற்றத்தையே.

இதற்கு எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அதோடு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய, கட்சியின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனின் அறிவுரையையும் ஏற்று நடக்க வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.  ஜெயலலிதாவும், எம். ஜி.ஆர்-வும் கட்சியை எவ்வாறு வழிநடித்தினார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி சிந்தித்து செயல்பட வேண்டுமென்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Previous articleபுதிய விதி: இனி மாதந்தோறும் மின் கட்டணம் வரும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!
Next articleபாஜக வில் டிடிவி.. எடப்பாடிக்கு விடும் நேரடி சவால்!! சத்தமின்றி கழட்டிவிடப்பட்ட அதிமுக!!