TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அடுத்தக்கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.
இதனை வரும் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்க திட்டமிட்டிருந்த விஜய்க்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்துள்ளனர். முதலில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உரையாற்ற திட்டமிட்டிருந்தனர். இது மறுக்கப்பட்டதால் மரக்கடை பகுதியில் சுற்றுப்பயணம் தொடங்க திட்டமிட்டனர். இதுவும் மறுக்கப்பட்டது.
மூன்றவதாக காந்தி மார்க்கெட் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள அனுமதி கேட்டபோது 3-வது முறையும் அனுமதி மறுக்கப்பட்டதால் விஜய் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுப்பயணம் மேற்கொள்ள காவல் துறையின் அனுமதி கோரி, த.வெ.க பொதுச்செயலளார் புஸ்ஸி ஆனந்த் திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடுதல் , காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, போன்ற 6 பிரிவுகளின் கீழ் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு த.வெ.க தலைவர் விஜய் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சியில் இருக்கும் அரசு தோல்வி பயத்தால் தேவையற்ற வழக்குகளை பதிவு செய்து வருகிறது. ஆனால் எங்களின் பயணம் மக்களிடம் நேரடியாக சென்று உண்மையை சொல்வதேயாகும். இதனால் எங்கள் கட்சி எந்த காரணம் கொண்டும் அஞ்சி நிற்காது, எதிர்த்து நிற்கும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.