அ.தி.மு.க-வில் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மற்றும் பிரிவுகளை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துகளை சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார். அவர், “அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் தொடர வேண்டும்; அது தான் எங்களுக்கு ஈசி” என்று கூறி நகைச்சுவை கலந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
உதயநிதியின் இந்த கருத்து, தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதன் பொருள், அ.தி.மு.க-வின் தலைமையில் சிக்கல் நீடித்தால், அது தி.மு.க-வின் அரசியல் முன்னேற்றத்தில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என்பதே ஆகும்.
இ.பி.எஸ் ஆட்சியின் கீழ் அ.தி.மு.க பல அணிகளாக பிளவுபட்டு பல தேர்தல்களில் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளன என்பதையும், இதனால் தி.மு.க-வுக்கு அரசியலில் வெற்றி பெறுவது எளிதில் கிடைக்கும் என்பதையும் அவர் நகைச்சுவையாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க வலுவிழந்து விட்டதை மக்கள் மத்தியில் திணிக்கும் முயற்சியில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. அந்த முயற்சியின் ஓர் அங்கமாக உதயநிதியின் இந்த கருத்தை பார்க்க முடிகிறது. இந்த சொற்கள், ஒரு பக்கம் உதயநிதியின் அரசியல் கூர்மையை வெளிப்படுத்துகின்றன. மற்றொரு பக்கம், அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை மற்றும் பலவீனங்களை சுட்டிக்காட்டுகிறது.
இது அ.தி.மு.க-வின் ஆதரவாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. உதயநிதியின் இந்த கருத்து ஆழமான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், தி.மு.க தனது நம்பிக்கையை வலுப்படுத்தி வருகிறது.