BJP: அதிமுக, பாஜக-வின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கழகத் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக-வினர் இன்று எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தீர்மானிப்பது அவர்களது தலைமை அல்ல; பாஜக-வினர் தான், குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வார்த்தையை அதிமுக-வின் அரசியல் நகர்வை தீர்மானிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டு இருக்கிறார்.
அதிமுக எப்போது கூட்டணி முடிவு எடுக்க வேண்டும், எப்போது பிரச்சாரம் செய்ய வேண்டும், எந்த கோஷங்களை எழுப்ப வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பது கட்சித் தலைவர் அல்ல, அமித்ஷா தான் என்று தன்னுடைய கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளார். கட்சியின் தலைவருக்கு சுயமாக முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உருவானது அந்த கட்சிக்கும், தமிழக அரசியலுக்கு ஆபத்தானதாகும் என்று தெரிவித்தார்.
அதிமுக-வின் முடிவெடுக்கும் சுதந்திரம் அனைத்தும் இன்று பாஜக-வின் கையில் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதிமுக-வின் தற்போதைய நிலையைப் பார்த்தால் கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியடைந்து வேறு வழிக்கு மாறிவிடுவார்கள் என்றும் வலியுறுத்தினார்.
இப்படியே தொடர்ந்தால் அதிமுக-வுக்கு எதிர்காலமே இல்லாமல் போகும், தங்களின் சுயமரியாதையை இழக்கும் நிலை வந்துவிடும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கடுமையான விமர்சனத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் தீவிரமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.