PMK TVK: சமீப காலமாகவே பாமக-வில் ராமதாஸ்-க்கும், அன்புமணி-க்கும் இடையே சச்சரவு நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் அன்புமணியை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு வாக்கு யார் பக்கம் செல்லும் என்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
தமிழக அரசியலில் பாமக எப்போதுமே ஒரு வலுவான அடித்தளத்தை வைத்திருக்கும் கட்சியாகும். குறிப்பாக வன்னியர் சமூக வாக்குகளை தன் பக்கம் வைத்திருக்கிறது. இது தேர்தல் நேரத்தில் பாமக-விற்கு துணையாக இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட பிளவினால் ராமதாஸ் அணியும் அன்புமணி அணியும் தனித்தனி அரசியல் நடைமுறைகளை பின்பற்றுவதாக தெரிகிறது.
இதனால் பாமக வாக்காளர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திணறுகின்றனர். இந்த சமயத்தில், விஜய் தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். விஜய் ஏற்கனவே இளைஞர் ஆதரவை அதிகளவில் பெற்றிருக்கும் பட்சத்தில், பாமக பிரிவால் அதிருப்தியில் உள்ள கட்சி தொண்டர்களின் வாக்கும் விஜய் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.
பாமக பிளவுப்பட்டதால் வாக்குகள் முழுவதும் விஜய்க்கு மாறுமா என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை, ஆனால் அதிருப்தி அடைந்த வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 2026 தேர்தலை முன்னிட்டு யாருக்கு ஆதரவாக செல்லப் போகிறது என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.