ADMK DMK: அனைவரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில், அனைத்து முன்னணி கட்சிகளிலும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளும், வெற்றி பெறுவதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக தற்போது செயலிழந்து உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதற்கு காரணம் ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைவர்களின் நீக்கமே என்று அதிமுக உள்வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவர்களின் பிரிவினையால் பலவீனமடைந்த அதிமுக, இப்போது மேலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதிமுக-வில் இருந்து 5000 ஆதரவாளர்களுடன் ஒரு முக்கிய புள்ளி திமுக-வில் இணையபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கு, பெரிய அதிர்ச்சியாக உள்ளதோடு, தமிழ்நாட்டு அரசியலிலும் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. திமுக-வுக்கு இது ஒரு பெரிய பலமாகும். ஏற்கனவே கூட்டணியில் பலமாக இருக்கும் திமுக, மக்கள் மத்தியிலும் வலுவான கட்சியாக மாற வாய்ப்பு உள்ளது.
ஓ.பி.எஸ்-இன் ஆதரவாளர்கள் 100 பேர் தற்போது இ.பி.எஸ் தலைமையில் இணைந்தாலும், அதனை விட பலமடங்கு ஆதரவாளர்கள் அதிமுக-வில் இருந்து மாறி திமுக-வில் இணைவது இ.பி.எஸ்-க்கு மிக பெரிய சவாலாக அமையும். இதனால் அதிமுக மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது.