இளைஞர் ஆதரவுக்கான நேரடி போட்டி: உதயநிதி VS விஜய்?

0
119
live-competition-for-youth-support-udayanidhi-vs-vijay
live-competition-for-youth-support-udayanidhi-vs-vijay

T.V.K D.M.K: சேலம் எப்போதுமே அதிமுக-வின் வலுவான கோட்டையாக கருதப்பட்டாலும், சமீபத்தில் ஏற்பட்ட பிரிவுகள், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் போன்றோரின் பிரிவுகள் அதிமுக ஆதரவாளர்களை குறைத்துள்ளது. இந்த சூழலில் திமுக தனது செல்வாக்கை விரிவாக்க உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது.

திமுக-வின் இளைஞர் முகமாக திகழும் உதயநிதி, சேலம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால், இந்த முன்னேற்றம் வெறும் அதிமுக-வுக்கு மட்டுமல்ல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் சவாலை ஏற்படுத்தும். காரணம், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் மீது விஜய்க்கு அதிக ஆதரவு இருக்கிறது.

திமுக அதே இளைஞர் வாக்காளர்களை கவர முயற்சி மேற்கொண்டால், விஜய்யின் வாக்கு வங்கியில் குறைவு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கும் சவாலை ஏற்படுத்தும். விஜய்க்கு முக்கிய பலமாக கருதப்படும் இளைஞர்கள் மீது உதயநிதி தாக்கம் செலுத்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது விஜய்க்கு நேரடி போட்டியாக மாறும் அபாயம் உள்ளது.

ஆனால், இதை மறுபுறமாக பார்க்கும்போது, உதயநிதியின் வருகை விஜய்க்கு ஒரு மறைமுக வாய்ப்பையும் தரலாம். காரணம், அதிமுக கோட்டையில் திமுக வலுப்பெறும் பட்சத்தில், அதிமுக-வில் அதிருப்தியடைந்த வாக்காளர்கள் புதிய மாற்றத்திற்காக விஜய்யை நாடலாம். இதனால், விஜய்க்கு முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களின் ஆர்வம், தவெக-வுக்கு இன்னும் பெரிய பலமாக இருக்கும்.

சேலத்தில் உதயநிதி வருகை இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் . ஒன்று, விஜய்க்கு இளைஞரின் வாக்கில் குறைவு ஏற்படும். இரண்டாவது, அதிமுக பிளவு காரணமாக விஜய்க்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மொத்தத்தில், இந்த அரசியல் போட்டி யாருக்கு பலன் தருகிறது என்பதை அடுத்தடுத்த தேர்தல் சூழ்நிலைகள் தான் தீர்மானிக்கும்.

Previous articleசேலத்தில் திமுக வியூகம் தீவிரம்! இளைஞர் வாக்காளர்களை கவர உதயநிதியின் சேலம் மிஷன்..
Next article“எதையும் எதிர்ப்பது தி.மு.க வழக்கம்”-நயினார் நாகேந்திரன் விமர்சனம்!