A.D.M.K B.J.P: அதிமுக-வில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக செங்கோட்டையனை கட்சி பதவிகளை இருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கும் கால கட்டத்தில் அதிமுக அதன் ஒற்றுமையை இழந்து பல பிரிவுகளாக பிரிந்திருப்பது கட்சிக்கு நல்லதல்ல என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய முடிவில் உறுதியாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இப்பொழுது அவருடன் இருப்பவர்கள் கூட வேறு கட்சிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இது 2026 தேர்தலில் அதிமுக-விற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இ.பி.எஸ்-யிடமும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் தனது பிரச்சாரத்தை ஒதுக்கி வைத்தது இதற்காக தான் என்று பலரும் கூறி வந்தார்.
ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வானிலை காரணமாக மட்டுமே பிரச்சாரம் ஒதிக்கிவைக்கப்பட்டது, நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை என்று கூறினார். மேலும் பேசிய அவர் நான் யாருடைய மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன், எனக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்று கூறினார். சிலர் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர், அவர்களுக்கு முடிவு கட்டப்படும். அதிமுக-வை உடைக்க எவராலும் முடியாது.
அதிமுகவில் பிரிவினையை ஏற்படுத்தியவர்களை எப்படி மீண்டும் கட்சியில் சேர்க்க முடியும் என்று கூறி இருந்தார். இவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் போன்றோரை மறைமுகமாக சாடிய அவர், அவர்களை கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மத்திய அமைச்சர்களுடன் இ.பி.எஸ் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியது பாஜக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினாலும் அதில் எந்த பயனுமில்லை நான் என்னுடைய முடிவில் உறுதியக இருப்பேன் என்று கூறியதாக கருதப்படுகிறது. இதன் மூலம் அதிமுக-விற்கும், பாஜக-விற்கும் இடையே விரிசல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
ஒரு வேளை அவ்வாறு நிகழ்ந்தால் அது செங்கோட்டையன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் ஆகியோருக்கு சாதகமாகவும், பாஜக-வை மட்டுமே நம்பியிருக்கும் இ.பி.எஸ் தலைமயிலான அதிமுக-விற்க்கு மிக பெரிய பாதகமாகவும் அமையும் என்று சொல்லப்படுகிறது.