A.D.M.K T.V.K: அதிமுகவில் தொடர்ந்து பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வரும் நிலையில் அதனை சரி செய்ய முடியாமல் இ.பி.எஸ் தவித்து வருகிறார். கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இவரின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்ததற்குப் பிறகு, அவர் தனிப்பட்ட முறையில் தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனைகள் நடத்தி வந்தார். ஏற்கனவே ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில், புகழேந்தியின் விலகலும் அதிமுகவின் வலிமையை குறைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகினார். இது அதிமுகவிற்கு பெரிய சவாலாக அமைந்தது. அதிமுகவின் தற்போதைய சூழ்நிலையில் புகழேந்தியும் தவெகவில் இணைந்தால் அது இக்கட்சிக்கு இன்னொரு பின்னடைவாக அமையுமென்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஏற்கனவே அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில் இவரின் இந்த முடிவு அடுத்த அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.