கொங்கு மண்டலத்தில் தேர்தல் களம் சூடுபிடிப்பு.. பதிலுக்கு பதில்!

0
195
Response to the heated election campaign in Kongu region!
Response to the heated election campaign in Kongu region!

ADMK DMK:அதிமுகவின் கோட்டையாக விளங்கி வரும் கொங்கு மண்டலம், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய இடமாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக துணை பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு வருகை தந்தது பெரும் அரசியல் கவனத்தை ஈர்த்தது.

அவர் சேலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அங்கு திமுகவின் நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் எனக் கூறப்பட்டது. இதனால், அதிமுக வாக்காளர்கள் திமுக பக்கம் திசை திருப்பப்படுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்திற்கு வந்துள்ளார்.

அரசியல் ரீதியாக, உதயநிதி ஸ்டாலின் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடியின் விஜயம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் ஆதிக்கம் குறையவில்லை என்பதையும், இந்த பகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டைதான் என்பதையும் வலியுறுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் வருகை அமைகிறது.

குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தங்களது வாக்காளர்களை நிலைப்படுத்த தீவிரமாக செயல்படும் நிலையில், கொங்கு மண்டலத்தை கைப்பற்றும் போட்டி அதிமுக-திமுக இடையே மேலும் தீவிரமடைந்துள்ளது.

Previous articleஇபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக பரிந்துரைத்தவரே இவர் தான்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..
Next articleசேலத்தில் சூடேற்றிய அதிமுகவின் இணைப்பு .. திமுகவிற்கு அதிர்ச்சி!