அப்பா மகன் சண்டையில்! திமுகவிற்கு அதிகரிக்கும் பலம்.. குஷியில் ஸ்டாலின்!

0
198
Questionable PMK ! A new shock for Ramdas? Stalin in Khushi..
Questionable PMK ! A new shock for Ramdas? Stalin in Khushi..

PMK DMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் உட்கட்சி பூசல் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் கட்சியின் தலைவர், மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணியே என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ராமதாஸ் தரப்பு ஏற்க மறுத்து, அதை சட்ட ரீதியாக சவால் விடுவதாக அறிவித்துள்ளது. ராமதாஸ் தரப்பு இது செல்லாது என்று கூறி வந்தனர்.

தற்போது பாமக நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். ஒருபுறம், அன்புமணி மீது அங்கீகாரம் கிடைத்துள்ளதால் அவருடன் தொடர்வது தான் சரி என்று சிலர் கருத, மறுபுறம் ராமதாஸின் நீண்ட கால அரசியல் அனுபவத்தை முன்னிறுத்தி அவரை தொடர்ந்து செல்ல வேண்டுமென்று இன்னோர் தரப்பு வலியுறுத்துகிறது.

இந்நிலையில் அன்புமணியிடம் அதிமுகவும், ராமதாசிடம் திமுகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாமக கூட்டணி தீர்மானம் எந்த திசையில் செல்லும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் வேறு கட்சியில் இணைந்து வரும் வேளையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் ஊராட்சியிலிருந்து பாமகவை சேர்ந்த முக்கிய தொண்டர்கள் 25 பேர் டி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

பாமக தற்போது கடுமையான உட்கட்சி சவாலை எதிர்கொண்டு வரும் நிலையில், கூட்டணி தீர்மானங்களும், தொண்டர்களின் இடமாற்றமும் கட்சியின் எதிர்கால அரசியல் பாதையை தீர்மானிக்கக்கூடிய முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

Previous articleபாஜகவை தொடர்ந்து பாமக இபிஎஸ்க்கு வைத்த செக் .. சிக்குவாரா இபிஎஸ்! ராமதாஸ் எடுத்த முக்கிய தீர்மானம் ..
Next article விஜய்யின்  கூட்டணியால்.. திமுகவின் வாக்கு வங்கி சிக்கல்? ஸ்டாலின் என்ன செய்வார்!