
DMK: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழகம் என்ற பெயரிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகவை போல திமுகவிலும் முக்கிய முகங்கள் விலகுவதும், கூட்டணி தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பதும், போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
ஏற்கனவே திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக அறியப்பட்டு வந்த காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விசிகவும் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியை விட்டு விலகும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் எங்களுக்குரிய இடத்தை கேட்டு பெறுவோம் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவை விட்டு விலகும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இவர்கள் கேட்ட சீட்டுகளை திமுக தரவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியை விட்டு விலகி விலகுவது உறுதி என்று பேசப்படுகிறது.