ADMK: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் என அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கிறது. அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் அவர்கள் பக்கம் நின்றனர். இந்நிலையில் நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகியிருந்த சசிகலா செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு குரல் கொடுக்க முன்வந்தார்.
இதனை தொடர்ந்து சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வெண்மதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், இன்னமும் காலம் தாழ்த்திக் கொண்டே செல்வதால் என்னால் என்னுடன் இருப்பவர்களிடம் பதில் சொல்ல முடியவில்லை என்றும், அதனால் அவரிடம் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவை பாஜக தான் திட்டமிட்டு பிரிந்திருப்பதாகவும் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார். சசிகலாவை விட அவரது முக பாவனைகளே அதிகம் பேசப்பட்டன. இதனை தொடர்ந்து வெண்மதி செங்கோட்டையன் அல்லது டிடிவி தினகரன் உடன் இணைவார் என்று பேசப்படுகிறது. இது சசிகலாவின் அரசியல் பயணத்தை பின்னுக்கு தள்ளும் முதற்படியாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.