ADMK TVK: நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்சி தொடங்கிய 1 வருடத்திலேயே இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு மற்றும் அரசியல் ஆதரவையும் பெற்றுள்ளார். அவர் நடிகராக இருந்த போதே தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக திகழ்ந்தார். தற்போது அவரின் அரசியல் வருகை அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முக்கியமாக அவரின் ரசிகர்கள் அனைவரும், கட்சியின் தொண்டர்களாகி விடுவார்கள் என்று அவர் எண்ணி கொண்டிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் 2 பெரிய மாபெரும் மாநாடுகள் , பிரச்சாரங்கள் நடத்தியுள்ள விஜய் தனது பிரதான அரசியல் எதிரி திமுக தான் என திமுக அரசையும், அதன் தலைமையையும் கடுமையாக வஞ்சித்து வருகிறார். இக்கருத்தை பலரும் விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து இவர் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அது குறித்து விஜய் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார்.
திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வியெழுப்பிய போது புதியதாக எந்த கட்சி உதித்தாலும் சரி, அப்போது முதல் இப்போது வரை திராவிட கட்சிகளாக திகழும் அதிமுகவிற்க்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறினார். இபிஎஸ்யை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடமும் செய்தியாளர்களால் இந்த கேள்வி எழுப்பட்டபோது, திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகம் தான் போட்டி என்ற கருத்தை யார் சொல்கிறார்கள்.
விஜய் தானே சொல்லிக் கொண்டிருக்கிறார். வேறு யாராவது இதைப்பற்றி சொன்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். மேலும் திமுகவுக்கு எதிராக, திமுகவை வீழ்த்துகின்ற ஒரே சக்தி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே. வேறு யாராலும் வீழ்த்த முடியாது. அதிமுக-பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்திருக்கும் கூட்டணி தான் திமுகவை வெல்வதற்கான ஒரே கூட்டணி என்றார். இவர்கள் இருவரின் இந்த கருத்து அதிமுகவில் தவெகவிற்கான எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பதற்கு எடுத்துகாட்டாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.