ADMK NDA: அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக உள்ளது. அதற்கான காரணம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அவர்கள் காலூன்ற வேண்டும் என்பதேயாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தினார்.
அதற்கு டிடிவி தினகரன், கூட்டணிக்கான தலைமையை அதிமுக வகிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நாங்கள் NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை ஓபிஎஸ்யும் சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.
இதனால் நயினார் நாகேந்திரனை எதிர்ப்பவர்களை மட்டும் அண்ணாமலை சந்திப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்க்கிடையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அண்ணாமலை வந்த அழைத்தால் NDA கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அது குறித்து தற்சமயம் நான் எந்த பதிலும் கூற விரும்பவில்லை என்றும், டிடிவி தினகரன் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காததற்க்கு வரவேற்பளிப்பதாகவும் கூறினார்.
இவரின் இந்த பதில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர் NDA கூட்டணியில் இணையும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்சமயம் ஓபிஎஸ்யின் ஆதரவை சார்ந்திருக்கும் டிடிவி தினகரனுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அமமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். அண்ணாமலை ஓபிஎஸ் சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.