ADMK DMK: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அதிமுக தேர்தல் பரப்புரை நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்தது. அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கம் போல திமுகவை வஞ்சித்தார். அப்போது அவர் அதிமுகவில் தொண்டன் கூட அடிமை இல்லை என்றும், அதிமுக அனைவரையும் சமமாக நடத்த கூடிய கட்சி என்றும் கூறினார்.
மேலும் பாஜக- அதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது என்றும் கூறினார். அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறது என்று பரவிய கருத்துக்கு, அதிமுகவை யாரும் அடிமையாக்க முடியாது என்றும் கூறினார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டி காட்டி பேசினார். அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, 2026 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும் கூறினார்.
மேலும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கே.எஸ். அழகிரி திமுக சாற்றை உறிஞ்சி விட்டு சக்கையை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு தருகிறது என்று கூறியிருந்தது சரியான கருத்து என்றும், இது போன்ற மனநிலை திமுக தலைவர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறினார். இபிஎஸ் கே.எஸ். அழகிரிக்கு சாதகமாக பேசியது திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே அவர் சலசலப்பை ஏற்படுத்த முயல்கிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது.