இபிஎஸ்யை துரத்துவதே முதல் வேலை.. ஓபனாக பேசிய டி.கே.எஸ் இளங்கோவன்.. வெளிவந்த முக்கிய தகவல்!!

0
196
The first task is to chase EPS.. DKS Elangovan spoke openly.. Important information came out!!
The first task is to chase EPS.. DKS Elangovan spoke openly.. Important information came out!!

ADMK DMK: அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் முறிந்த பாஜக கூட்டணி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டது. ஆனால் சில முரண்பாடுகள் காரணமாக பிரிந்தது. தற்போது சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை, அதே போல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவாலும் வலுவான ஆட்சியை அமைக்க முடியாமல் இருக்கிறது.

இதனை சரி செய்யவே இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்ததாக கூறுகின்றனர். ஆனால் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே வெளிவராத சில சச்சரவுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் பாஜக அதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கிறது என்ற தகவலும் வந்தது. இதனை தொடர்ந்து அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் இபிஎஸ் பாஜகவால் ஒதுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தலில் வெற்றி பெற்றால் தேசிய ஜனநாயக கூட்டணி அமையுமென்று தான் கூறியிருக்கிறாரே தவிர அதிமுக அல்லது கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறவில்லை.

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க பாஜக முயல்வது கூட அதிமுகவின் ஒற்றுமைக்கு அல்ல; பாஜகவின் வளர்ச்சிக்கு தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர். பாஜக அதிக தொகுதிகள் கேட்டது, டி.கே.எஸ் இளங்கோவன் கூறிய கூற்றுக்கு அடித்தளமாக அமைகிறதென அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Previous articleசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கடம்பூர் ராஜா.. அதிமுகவினர் இடையே பரபரப்பு!!
Next articleசி.வி.சண்முகம் நயினார் நாகேந்திரனின் புதிய திட்டம்.. சதி வலையில் அண்ணாமலை ஓபிஎஸ்!!