டிடிவி தினகரன் செங்கோட்டையன் சந்திப்பு.. இபிஎஸ் மீது செங்கோட்டையனுக்கு பயம்!!

0
217
TTV Dhinakaran Sengottaiyan meeting.. Sengottaiyan is afraid of EPS!!
TTV Dhinakaran Sengottaiyan meeting.. Sengottaiyan is afraid of EPS!!

ADMK: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே அனைவராலும் அறியப்பட்டவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அப்போதிலிருந்து இவருக்கு கட்சியிலிருந்த அந்தஸ்து குறைந்து விட்டதாக அவர் உணர்ந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் என்னை போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியிருந்தார். இதனால் இபிஎஸ் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். ஆனாலும் செங்கோட்டையன் தனது 10 நாள் கெடு தொடரும் என்றே அறிவித்திருந்தார். இவரின் இந்த கருத்துக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்ற பல முன்னணி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி செல்கிறார் என்று தகவல் வந்த போது, அது மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காகவா என்று பலரும் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார். பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். இதனை ஊடகங்களிடமும் தெரிவித்தார்.

இதே போன்று நேற்று சென்னை சென்ற செங்கோட்டையன் டிடிவி தினகரனை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த செங்கோட்டையன் அவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரை காண சென்றேன் என கூறினார். ஆனால் அரசியல் வட்டரங்கள் கூறும் கருத்து என்னவென்றால் தற்போது செங்கோட்டையன் கட்சியின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருந்து வருகிறார்.

இந்நிலையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோரை சந்திப்பது வெளியே தெரிந்தால் அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என்ற பயத்தினால் தான் இதனை மறைக்கிறார் என்றும், இந்த காரணத்திற்காக தான் அமித்ஷாவை சந்திப்பதை கூட அவர் ஊடகங்களுக்கு கூறாமலிருந்தார் என்று கூறுகின்றனர்.

Previous articleதிரை மறைவிலிருந்து திட்டம் தீட்டும் திமுக.. தடம் மாறும் ராமதாஸ்.. கே.பாலு விமர்சனம்!!
Next articleமகனுக்கு போட்டியாக ராமதாஸ் அறிவித்த  போராட்டம்!! அதோகதியாகும் அன்புமணி நிலை!!