செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக அமைச்சர்.. பேசுபொருளாகியிருக்கும் செங்கோட்டையன் பேட்டி!!

0
150
AIADMK minister supports Sengottaiyan...Sengottaiyan interview which is the topic of conversation!!
AIADMK minister supports Sengottaiyan...Sengottaiyan interview which is the topic of conversation!!

ADMK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் ஒற்றுமையாகவும், அதிகளவில் மக்கள் நம்பிக்கையையும் பெற்றிருந்தது. ஆனால் தற்போது அதன் வலிமை குன்றியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார்.

இதற்கு பிறகு தான் அதிமுக அணி அணியாக பிரிய ஆரம்பித்தது. முதலில் ஜெயலலிதாவின் நீண்டநாள் தோழியான சசிகலாவையும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த டிடிவி தினகரன் அவர்களையும், இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கினார். பிறகு ஓபிஎஸ்யும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு தான் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழந்தது.

இதில் புதிய திருப்பமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்றும், அதற்காக இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதிக்கப்படுகிறது. இதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னை போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது.

இதனால் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். இதற்க்கு பிறகு இரு தினங்களுக்கு முன்பு செங்கோட்டையன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்ததாக தகவல் பரவியது. இதனை மறுத்த அவர் சென்னையிலுள்ள மருத்துவமனையில் என் மனைவி சிகிச்சை பெற்று வருவதால் அவரை காண சென்றேன் என கூறினார்.

மேலும் பேசிய அவர் அதிமுகவில் இப்போது உள்ள அமைச்சர்கள் பலர் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர், அவர்கள் யாரென்று நான் கூற விரும்பவில்லை என்று கூறினார். தற்போது அந்த அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக-பாஜக உடன் கூட்டணி அமைத்ததை விரும்பாத முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததற்க்கு பாஜக தான் காரணம் என்று கூறினர்.

அப்போது முதல் இப்போது வரை அவர் அதிமுகவின் மேல் அதிருப்தியில் இருந்து வருகிறார். மேலும் அதிமுக சார்பில் நடைபெறும் எந்த விழாவிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த காரணத்தினால் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர் ஜெயக்குமாராக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Previous articleதூய்மை மிஷன்: ‘கொட்டுனா வலிக்குமா?’ பிரச்சாரம் – தமிழ்நாட்டில் 750 டன் கழிவு பிரிப்பு
Next articleதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்.. புதிய திருப்பத்தை ஏற்படுத்த போகும் சட்டமன்ற தேர்தல்!!