ADMK DMK: நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவது, பிரச்சாரம் மேற்கொள்வதென தங்களை பிஸியாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும், அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நேற்று அதிமுக சார்பில் கரூரிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை வழக்கம் போல் வஞ்சித்தார். கரூர் எப்போதும் திமுக கோட்டையாக திகழும் பட்சத்தில் அதிமுக பிரச்சாரத்திற்கு அவ்வளவு கூட்டம் கூடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அப்போது திமுகவை சேர்ந்த கரூர் அமைச்சராக திகழும் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கினார் இபிஎஸ். தொடர்ந்து பேசிய அவர் செந்தில் பாலாஜி சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் என்றும், ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியில் தாவும் அவர் அடுத்த தேர்தலில் எந்த கட்சியில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது என்றும் கூறினார்.
அவரின் ஆட்சி காலம் இன்னும் 6 மாதம் தான் என்றும் கூறினார். கரூரில் ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் மணல் திருட்டு நடைபெறுகிறது. இந்த நிலையில் அவரை அவராலேயே காப்பாற்றிக் கொள்ள முடியாது இதில் எங்கிருந்து அவரை நம்பியிருக்கும் கரூர் மக்களை காப்பாற்ற போகிறார் என்று கேள்வி எழுப்பியதோடு, செந்தில் பாலாஜியை நம்ப வேண்டாமென்றும் மக்களிடம் கூறினார். செந்தில் பாலாஜியின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தப்பிக்க முடியாது என்பதையும் உறுதியாக வலியுறுத்தி பேசியிருந்தார்.