TVK DMK: தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகராக திகழ்ந்த விஜய் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் கட்சியாக மாற்றினார் விஜய். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்தார்.
அதற்கான நேரம் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் தவெக தேர்தலுக்கான பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சி ஆரம்பித்த நாட்களில் மக்களை சந்திக்காமல் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே விஜய் தனது கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனால் இவர் வொர்க் பிரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் தான் பிரச்சாரம் மேற்கொள்வேன் என கூறியிருப்பது அரசியலில் களத்தில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இதனால் இவரை வீகென்ட் தலைவர் என்று கூறி வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் திமுக சார்பாக நடைபெற்ற விழாவில் நான் ஒன்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்பவன் அல்ல.
வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் நான் வெளியூரில் தான் இருப்பேன் என்றும் கூறி விஜய்யை நேரடியாக விமர்சித்திருந்தார். ஏற்கனவே ஒரு முறை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் புதிய எதிரிகள் என்று விஜய்யை மறைமுகமாக கூறியிருந்தது, தவெகவின் மீது இருக்கும் பயத்தினால் தான் என்று பலரும் கூறி வந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அமைந்திருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.