TVK MDMK: தவெக தலைவர் விஜய் 2026 தேர்தலை எதிர் நோக்கி தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். விஜய்யுடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரச்சாரத்தில் திமுகவிற்கு எதிராக பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வரும் விஜய் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தாயை போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கூறியிருந்தார்.
இந்நிலையில் மதிமுக தலைமை அலுவலகத்தில், தமிழ் ஈழ விடுதலை போராளி திலீபன் நினைவு நாளையொட்டி, மதிமுக சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் கேள்வி எழுப்பபட்டது. ஈழத்தமிழர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதை மனதார வரவேற்பதாக அவர் கூறினார்.
இவ்வளவு நாளாக விஜய்யை பற்றி எந்த கருத்தும் கூறாமலிருந்த வைகோ தற்போது அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாததால் வைகோவின் இந்த கருத்து அவர் விஜய் உடன் கூட்டணியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மதிமுக, அமமுக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் விஜய் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.