TVK: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய் 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், தொடர்ந்து நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்வதாக அறிவித்திருந்தார். 27ஆம் தேதி இந்த இடங்களில் பிரச்சாரமும் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் விஜய் மீதும் அவரது கட்சியின் மீதும் புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பினர் அவர்களது வாதத்தை முன் வைத்து வருகின்றனர். கரூரில் நாங்கள் கேட்ட இடமான லைட் ஹவுஸ், மற்றும் உழவர் சந்தையை காவல் துறையினர் தரவில்லை என்றும், மாறாக அவர்கள் தந்த இடமான வேலுசாமிபுரத்தில் தான் பிரச்சாரம் செய்தோம் என்றும் கூறுகின்றனர்.
இந்த குறுகலான இடத்தை அவர்கள் பரிசிலீத்ததன் விளைவே இந்த 41 மரணங்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காவல் துறை இதனை மறுத்திருக்கிறது. விஜய் போன்ற பிரபலங்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடும் என்பதையறிந்தும் காவல் துறை இந்த இடத்தை ஒதுக்கியது தமிழக அரசு மேல் உள்ள தவறு தான் என்றும், விஜய் தரப்பின் மேல் எந்த தவறும் இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது. தவெக தரப்பு அவர்கள் வாதத்தை தொடர்ந்து முன் வைத்து வரும் சூழலில் இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசால் தனி நபர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.