அனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் திடீர் தடை;? அரசு சொன்ன காரணம்?

0
163

இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கு நேபாள அரசு திடீரென தடை விதித்துள்ளது. டிடி செய்தித் தொலைக்காட்சியைத் தவிர மற்ற அனைத்து செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கும் நேபாள அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்ணமைக் காலமாக நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடை உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே கூறலாம். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று பகுதிகளை நேபாள அரசு தனக்குதான் என்று சொந்தம் கொண்டாடி தீடிர் வரைபடம் வெளியிட்டது. இந்த வரைபடத்திற்கும் நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

அப்போது முதலே நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. நேபாள பிரதமர் ஒலி, கொரோனா வைரஸைவிட, இந்திய வைரஸ் மோசமானது என்று கடுமையாக விமர்சித்தார். மேலும்
இந்தியாவிற்கு எதிராக நேபாள அரசு தொடர்ந்து பல்வேறு கருத்துக்ளை வெளியிட்டு வந்தது.

இதற்கிடையில் இந்திய தரப்பிலும் அந்நாட்டு அரசுக்கு கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. சீனா உடனான நட்பால் தான் இந்தியாவை நேபாளம் சீண்டி வருவதாக கூறி வருகிறது. இந்நிலையில் தான் நேபாள அரசு இந்தியாவின் அனைத்து செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கும் திடீரென தடை விதித்துள்ளது.

நேபாளத்திற்கு எதிரான தேசவிரோத செய்திகளை ஒளிபரப்புவதாக கூறி, தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய தனியார் செய்தி தொலைக்காட்சிகளையும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நேற்று மாலை முதலே தனியார் செய்தி தொலைக்காட்சிகள் நேபாளத்தில் ஒளிபரப்பாகவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleதிருமணதடை மற்றும் மரண கண்டம் நீக்கும் திருச்சிற்றம்பலம் திருக்கோவில்கள்!!
Next articleகோவையில் நடந்த இருவேறு துயர சம்பவங்கள்;இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சோகம்!