TVK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த துயர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது மக்களின் உயிரிழப்புக்கு காரணம் யார் என்பதில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில் மாநில அரசு தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதியான அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான உண்மைகள், ஏற்பாடுகளில் ஏற்பட்ட தவறுகள் என்ன என்பதை இந்த குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
தவெக தலைவர் விஜய் தான் இதற்கு பொறுப்பு, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்ற கருத்தும் வலுத்து வருகிறது. நேற்று அவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டலும் வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு விஜய் மீது குறை கூறி வரும் நிலையில், மற்றொரு தரப்பு இந்த அசம்பாவிதத்திற்கு ஆளுங்கட்சியான திமுக தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தரப்பினர் அவர்கள் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரி விஜய் கைது செய்யப்படுவர் என்ற எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.