DMK TVK: ஆளுங்கட்சியான திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தன்வசப்படுத்தி விட வேண்டுமென்று தீவிரமாக உழைத்து வருகிறது. அதிமுக, நாதக, பாஜக போன்ற கட்சிகள் திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் புதிய அரசியல் கட்சியாக அறிமுகமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
விஜய் தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திமுக தான் தனது பிரதான அரசியல் எதிரி என்று கூறி வரும் நிலையில் இது திமுகவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே தவெகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்குடன் தான் தமிழக அரசு அதன் எல்லா பிராச்சாரத்திற்கும் அனுமதி அளிக்கலாம் அலைகழித்து வந்ததாக சிலர் கூறி வந்தனர்.
தவெகவிற்கு வரும் கூட்டத்தை கண்டு திமுக பயப்படுகிறது என்று விஜய் தனது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார். அந்த கூட்டத்தை வைத்தே விஜய்யை தோற்கடிக்க வேண்டுமென்ற நோக்குடன் தான் விஜய் தரப்பினர் கேட்ட லைட் ஹவுஸ், சந்தை திடல் பகுதிக்கு அனுமதி அளிக்காமல் குறுகிய பகுதியான வேலுசாமிபுரத்திற்கு அனுமதி அளித்தார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
மேலும் இதற்கு முன் நடைபெற்ற கள்ளசாராய மரணம், கற்பழிப்பு, அண்ணா பல்கலைக்கழக புகார் போன்ற துயர சம்பவங்களில் எந்த ஒரு திமுக தலைவரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுதல் கூறவில்லை. ஆனால் இதற்கு மட்டும் அனைத்து தலைவர்களும் நேரில் வந்து ஆறுதல் கூறினார்கள். இதனால் மக்கள் மனதில் தங்கள் கட்சியை நிலைப்படுத்தும் நோக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.