TVK DMK CONGRESS: நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும், மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதிலும் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் முதல் முறையாக தேர்தலில் களம் காண இருக்கும் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக 41பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படும் நிலையில் இங்கு விஜய் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயற்சிப்பதை தடுக்க திமுக இவ்வாறான சதியை செய்திருக்கிறது என்று விஜய் தரப்பினர் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து விஜய்க்கு பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் முக்கிய கூட்டணியாக கருதப்படும் காங்கிரஸும் விஜய் பக்கம் ஆதரவு அளித்து வருகிறது.
ராகுல் காந்திக்கும், விஜய்க்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. தனது பிரச்சாரம் அனைத்திலும் பாஜகவை வஞ்சித்த விஜய், எந்த ஒரு இடத்திலும் காங்கிரஸ்யை பற்றி பேசியதில்லை. இதனால் அவர் அரசியல் ரீதியாக காங்கிரஸ் உடன் நெருக்கமாக உள்ளார் என்ற செய்தியும் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கரூர் சம்பவம் நடந்த பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக, அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் புதிய திருப்பமாக இது நிகழ்ந்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு, ஆட்சியில் சம உரிமை போன்ற பிரச்சனைகள் வெடித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ்யை மட்டுமே நம்பியிருக்கும் திமுகவிற்கு இது பெரிய பேரிடியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவின் அடுத்த வியூகம் என்னவாக இருக்குமென்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.