TVK BJP: தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனது புதிய அரசியல் கட்சியை வலுபடுத்தும் முயற்சியில் நடிகர் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரின் அரசியல் முடிவுகள் எதுவாக இருக்குமென பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் பரிமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை குஷ்பு விஜயுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சமீபத்தில் தனது கட்சியை வலுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் அவர் எந்த கூட்டணியில் சேர்வார் என்ற விவாதம் அரசியல் களத்தில் சூடான கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் குஷ்பு, விஜய்யை நேரில் சந்தித்து பேசி தேர்தல் தொடர்பான கூட்டணி திட்டங்கள் குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார் என கூறப்படுகிறது. குஷ்பு தற்போது பாஜக தேசிய பெண்கள் பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ளதோடு, தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் புகழ் பெற்ற முகமாக இருப்பதால் விஜயுடன் அவரின் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இரு தரப்பினரின் சந்திப்பு வெற்றி கரமாக முடிந்தால் அது தமிழக அரசியல் களத்தில் பெரிய திருப்புமுனையை உருவாக்க வாய்ப்புள்ளது. வரவிருக்கும் நாட்களில் விஜய்-பாஜக உறவு எப்படி இருக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் கேள்வியாக உள்ளது.