டிடிவி தினகரனை துளைத்த ஆர்.பி உதயகுமார்.. நாங்கள் என்ன செய்தால் உங்களுக்கென்ன??

0
173
RP Udayakumar who pierced TTV Dhinakaran.. What do we do to you??
RP Udayakumar who pierced TTV Dhinakaran.. What do we do to you??

ADMK AMMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அது தற்போது வரை சரியாவதாக தெரியவில்லை. அந்த பிரச்சனை கூட்டணி கட்சி வரை வெடித்தது. இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக இபிஎஸ் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவதை பலரும் விமர்சித்து வந்தனர்.

வழக்கம் போல இபிஎஸ்-யை விமர்சித்த டிடிவி தினகரன், கரூர் சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார். பதவி வெறியில் எடப்பாடி வழக்கம் போல் பேசுகிறார் என்றும், கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்று கூறுவது கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் கூறினார். இதற்கு பதிலடியாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அரசியலில் உங்களுடைய தோல்வியை தங்கி கொள்ள முடியாமல் பொறாமையில் இவ்வாறு பேசி வருகிறிர்கள், உங்களை நம்பி வந்தவர்களை நாடு ஆற்றில் விட்டவர் தானே நீங்கள்.

உங்களை நம்பி கையெழுத்து போட்டவர்கள் நிலைமை இப்பொழுது என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார். இன்னும் பலர் உங்களை விட்டு எப்போது ஓடலாம் என்று பார்த்து கொண்டிருகிறார்கள். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? டிடிவி தினகரன் அவருடைய இருப்பை காட்டி கொள்ள இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை முன் வைத்து வருகிறார் என்றும் கூறினார்.

Previous articleநைசாக நழுவும் தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!
Next articleஅண்ணாமலையை எதிர்க்க தயாராகும் அமமுக.. டிடிடி தினகரனின் பேட்டியால் அதிர்ந்து போன அரசியல் களம்!!