CONGRESS VSK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான தேர்தல் சமயத்தில் நடிகர் விஜய்யின் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல் களம் எதிர் நோக்கி கொண்டிருக்கிறது. தனது நீண்ட நாள் நண்பனான காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அண்மையில் நடந்த கரூர் சம்பவத்தின் மூலம் பாஜக விஜய்யை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது. இதற்காக கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 8 பேர் கொண்ட தனி நபர் குழுவையும் அமைத்துள்ளது. இந்த தனி நபர் குழுவை போல காங்கிரசும் ஒரு குழுவை அமைக்க வேண்டுமென விசிக-வின் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த கருத்து திமுக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசு அமைத்திருக்கும் தனி நபர் குழுவின் மீது அவருக்கு நம்பிக்கையிள்ளாததையும் வெளிப்படுத்தியது. ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிகவிற்கு இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்படிருப்பதாக கூறி அதிருப்தியை ஏற்படுத்தினார்.
விஜய்யின் அரசியல் வருகையால் திமுக கூட்டணியிலிருந்து விலகலாம் என்ற முடிவை காங்கிரஸ் எடுத்திருப்பதாகவும், இந்நிலையை பயன்படுத்தி கொண்டு திருமாவளவன் திமுகவை தவிர்த்து காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. திமுகவில் குறைந்த தொகுதிகள் தரப்பட்டதை முன்னிறுத்தி, காங்கிரஸிடம் அதிக தொகுதிகள் கேட்டதாகவும் விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

