
DMK ADMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருணத்தில் கூட்டணி குறித்த வியூகத்தை வகுப்பதில் கட்சிகள் தீவிரம் கட்டு வருகின்றன. இந்நிலையில் பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையமோ, பாமகவின் தலைவரும், சின்னத்தின் உரிமையாளரும் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து ராமதாஸ் பாமகவில் முக்கிய பொறுப்பிலிருக்கும், ஒருவரது மகனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை வழங்கினார். இதனால் அன்புமணி மேலும் ஆத்திரமுற்றதாக அவரின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இந்த சூழ்நிலையில் ராமதாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தையை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மக்கள் நீதி மயத்தின் தலைவர் கமல்ஹாசன் ராமதாசை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த நிகழ்வில், அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேசி இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் நல்ல செய்தி கிடைத்தது என்று கூறினார்.
திமுகவுடன் கூட்டணி வைக்குமாறு கமல்ஹாசன் கூறியதாகவும், அதற்கு ராமதாஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவை தெரிவிக்கிறேன் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. பாமக இரண்டாக பிரிந்து இருப்பதாலும், அன்புமணி திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதாலும் அவர் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.