
TVK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு வலுசேர்க்கும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அரசியலில் குதித்துள்ளது. விஜய்க்கு ஆதரவு பெருகி வந்த நிலையில், அவர் முதல் தேர்தலிலே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் தான் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து விட்டது கரூர் சம்பவம்.
இதனை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழு அமைத்துள்ள பட்சத்தில், பாஜகவும் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இதனால் விஜய்யை கூட்டணியில் சேர்க்க பாஜக முயன்று வருகிறது என்ற கருத்தும் வலுப்பெற்றது.
இந்நிலையில் விஜய்-பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, சித்தாந்தம் வேறு வேறாக இருக்கும் போது எப்படி கூட்டணி அமைக்க முடியும் என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில், விஜய்யை தம் பக்கம் இழுக்க பார்க்கும் பாஜவிலிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இதில் விருப்பமில்லை என்பதை உணர்த்துகிறது.
மேலும் நமது கொள்கையை ஆதரிக்காத கட்சியை, கூட்டணியில் சேர்ப்பது கொள்கைக்கு எதிரான அநீதி என்றும் அவர்கள் சொல்வதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் பாஜக கூட்டணிகுள் வர அவரின் பிரச்சாரமே எதிரியாக அமைந்து விட்டது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.