TVK BJP: நடிகர் விஜய்யின் தவெக சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில், பரப்புரை நடைபெற்றது. இந்த பரப்புரையில் விஜய்யை காண 2500க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் மட்டுமல்லாது, உலக அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அப்போது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். இது அண்ணாமலையின் குரல் அல்ல, பாஜக சார்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் குரல் என்றும் சொல்லப்பட்டது. இது தொடர்பாக பாஜக தனி குழு அமைத்து விசாரித்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அண்ணாமலை எங்கு சென்றாலும், இந்த குழு மேற்கொண்டுள்ள விசாரணையை பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனால் கடுப்பான அண்ணாமலை நாங்க என்ன தவெகவிற்கு மார்க்கெட்டிங் ஆபீஸரா, சும்மா நொச்சு நொச்சுனு எல்லா இடத்துலயும் இதையே கேக்குறீங்க, இந்த பிரச்சனையை விஜய் தவிர மாற்ற எல்லோரும் பேசுறாங்க, வேணுமென்றால் போய் அவர்களிடம் கேளுங்கள் என்று கடுமையாக கூறியிருந்தார். இதனால் விஜய்க்காக பாஜக அமைத்த குழுவின் மேல் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கரூருக்கு செல்ல இருக்கும் விஜய், பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபியிடம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, கரூர் மக்கள் என்ன பூதமா? கரூருக்கு செல்வதற்கு எதற்காக ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு. நானும் கரூரை சேர்த்தவன் தான். யாராக இருந்தாலும் கரூருக்கு தைரியமாக செல்லலாம் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ஒரு முறை அண்ணாமலையின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் மீண்டும் வலுப்பெற்று வரும் இவரின் கருத்துக்கு, இவர் விஜய்யை ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.