தலையில் கை வைத்த இபிஎஸ்.. இதை செய்தால் தவெக கூட்டணி 100% உறுதி.. ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்!!

0
590
EPS with his hand on his head.. If he does this, the alliance is 100% sure.. Vijay started the game!!
EPS with his hand on his head.. If he does this, the alliance is 100% sure.. Vijay started the game!!

ADMK TVK: தமிழ் திரையுலகில் பிரபலமாகவும், யாரும் அசைக்க முடியாத நடிகராகவும் வலம் வருபவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். இந்த கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், பிரச்சாரங்களை தொடங்கியுள்ளார். 5 இடங்களில் பிரச்சாரம் செய்த தவெக கரூரில் பிரச்சாரம் செய்யும் போது, கூட்ட நெரிசல் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.

இதனை பலரும் அரசியல் ரீதியாக அணுகிய போது, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மற்றும் பாஜக விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல பேசி, இதை யாரும் அரசியலாக பார்க்க வேண்டாம் என கூறி வந்தது. இதனால் விஜய் மேல் தவறில்லை என்பதை நிரூபிக்க பாஜக 8 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது. என்ன தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்கினாலும், விஜய்க்கு பாஜக பக்கம் செல்லும் ஆர்வம் சிறிதும் இல்லை என்று கூறப்படுகிறது.

திமுகவை தனது அரசியல் எதிரி என்று கூறி வந்த விஜய், அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்த சமயத்தில், அதற்கான பேச்சு வார்த்தையும் திரைமறைவில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது விஜய், இபிஎஸ்யிடம் நீங்கள் பாஜக கூட்டணியிலிருந்து விலகினால், தவெக-அதிமுக உடன் கூட்டணி அமைப்பது உறுதி என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஜய்க்கு ஆதரவு அதிகம் இருப்பதாலும், சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி 1 வருடத்திற்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்ட காரணத்தினாலும், இருவரில் யாரை கை விடுவது என்று தெரியாமல் இபிஎஸ் திணறி வருகிறார். மேலும், பாஜக-அதிமுக இடையேயான சச்சரவு கூட்டணியால் முடிவுக்கு வந்த நிலையில் அதனை உடைக்க இபிஎஸ்க்கு மனமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இது தொடர்பாக இபிஎஸ் எடுக்கும் முடிவு தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Previous articleநிலை மாறும் அண்ணாமலை.. இவர புரிஞ்சிக்கவே முடியலையேப்பா!!
Next articleயாரை கேட்டு தவெக-அதிமுக கூட்டணியை உறுதி செய்தீர்கள்.. கடுப்பான விஜய்.. கலக்கத்தில் இபிஎஸ்!!