AMMK TVK ADMK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கரூர் விபத்திலிருந்தே சற்று பின்னோக்கி காணப்படுகிறது. விபத்து ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு விஜய் காணொளி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு முதல்வரை பற்றி அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் கூட்டணி குறித்த நடவடிக்கையை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கரூர் சம்பவத்திலிருந்து தப்பிப்பதற்கான நடவடிக்கையில் முழுமையாக இறங்கியுள்ளார்.
அண்மையில் அதிமுகவின் பிரச்சாரத்தில், தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்று கூறியிருந்தார். இது அதிமுக-தவெக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதை நிரூபித்தது. இந்த சூழலில் இது குறித்து செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பிய போது, மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், எங்களது தலைமையில் தான் கூட்டணி என்று விஜய் தெளிவுபட கூறியிருந்தார்.
அப்படி என்றால் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்பதை நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்வது. தவெக தலைமையின் கீழ் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுக கூட்டணி அமைக்க போகிறதா? என்று கேட்டார். மேலும் இபிஎஸ்யை முதல்வர் ஆக்குவதற்காக ஒன்றும் விஜய் கட்சி தொடங்கவில்லை என்றும் குறிப்பிட்டிருநத்தார். ஏற்கவே அதிமுக உடன் தவெக கூட்டணி அமைப்பதற்கு விஜய் யோசித்து வந்தார்.
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட அவர் எப்படி அதிமுக கூட்டணியில் இயங்குவார் என்றும் தவெக வட்டாரங்கள் கூறி வந்தன. இந்த இக்கட்டான சூழலில், அதிமுக கூட்டணிக்கு அரைமனதாக சம்மதம் தெரிவித்த விஜய் மீண்டும், தவெக தலைமையில் தான் கூட்டணி , நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று பழைய படி பேச தொடங்கி விடுவாரோ என்ற அச்சம், இபிஎஸ்-யிடம் எழுந்துள்ளது.