TVK CONGRESS: தவெக சார்பாக கரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 41பேர் உயிரிழந்துள்ளனர். இது விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், அவரை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. விஜய்க்கு கிடைத்திருக்கும் ஆதரவை நாம் பக்கம் நிலை நாட்ட வேண்டுமென்ற நோக்கில் பாஜக – அதிமுக தீவிரமாக முயற்சித்து வருகிறது.
அதனால் கரூர் சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்திருந்தாலும், இந்த விபத்துக்கு காரணம் திமுக தான் விஜய் அல்ல என்பதை நிரூபித்து விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென பாஜக 8பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று சாட்சியங்களை சேகரித்து வருகிறது. அதன் மூலம் திமுகவிற்கு எதிராக அறிக்கையை தயார்படுத்தி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் விஜய்க்கு கொள்கை எதிரி என்று கூறிய பாஜக உடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸும் விஜய்யை கூட்டணிக்குள் சேர்த்துவிட வேண்டுமென்று தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்படுகிறது. விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இணைய வேண்டுமானால், திமுக கூட்டணியை பிரிய வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
ஆனால் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ஒரு புறம் ஆளுங்கட்சியான திமுகவை விட்டு தேர்தல் சமயத்தில் விலகுவது சரியான முடிவு இல்லை என்றும், மறுபுறம் விஜய்க்கு இருக்கும் ஆதரவை கருத்தில் கொண்டு கூட்டணி அமைக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதனால் காங்கிரசில் இருக்கும் திமுக ஆதரவாளர்களை நீக்கி விட்டு விஜய் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்து உள்ளதாம் காங்கிரஸ்.