TVK: 2026யில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. தவெகவிற்கு யாரும் எதிர் பாராத அளவு ஆதரவு பெருகியது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை அடியோடு சரிக்கும் நிகழ்வாக அரங்கேறியது தான் கரூர் சம்பவம். இந்த சம்பவம் நிகழந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதன் தாக்கம் சற்றும் குறையவில்லை.
இதற்கெல்லாம் காரணம் திமுக அரசு என்று தவெக, தொண்டர்களும் விஜய்யும் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் ஆணையம் அமைத்தது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபியை விசாரணையை கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. விஜய்யை தொடர்ந்து இபிஎஸ், அண்ணாமலை போன்ற கட்சியின் முக்கிய தலைவர்களும் சிபியை விசாரணையை கோரியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய்க்கு தலைமை பண்பே இல்லையென்றும், இது எந்த மாதிரியான கட்சி என்றும் கேட்டு கடுமையான விமர்சனத்தை எழுப்பியது. இதற்கு பதிலளித்த விஜய் தரப்பு, அங்கிருந்த காவலாளர்களின் உத்தரவின் பேரில் தான் தான் விஜய்யும், இரண்டாம் கட்ட தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டனர். தொண்டர்களை கைவிடும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தது.
மேலும் விஜய் மீதான நீதிமன்றத்தின் கருத்து அவர் மீதும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் உள்ள மதிப்பை குறைத்து விட்டதாகவும் கூறியது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 13 ஆம் தேதியான இன்று அமர்வுக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு கைமாற்ற வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.