தவெகவிலிருக்கும் கருப்பு ஆடு.. கண்டறிந்த விஜய்.. அட இவரா அது.. ஷாக்கில் தவெக தொண்டர்கள்!!

0
744
The black sheep in TVK.. Vijay found it.. Oh, this is it.. TVK volunteers are in shock!!
The black sheep in TVK.. Vijay found it.. Oh, this is it.. TVK volunteers are in shock!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் புதிதாக உதயமான கட்சிக்கு இந்த அளவுக்கு ஆதரவு பெருகியது இதுவே முதல் முறையாகும். இக்கட்சி 2 மாபெரும் மாநாடுகளை நடத்தியதோடு, மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளது. 5 பிரச்சாரங்களை நடத்திய தவெக ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கோளும் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெறிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தற்போது கூட்டணி கணக்குகளில் ஆர்வம் காட்டாத விஜய், கரூர் சம்பவத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்த போலிசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், விஜய்யிக்கு தலைமை பண்பே இல்லையென்றும், இது எந்த மாதிரியான கட்சி என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்த விஜய் தரப்பு காவலாளர்களின் உத்தரவின் அடிப்படையில் தான் அங்கிருந்து வெளியேறினோம் என்று கூறினார்கள். இவ்வாறு கரூர் சம்பவத்தில் தொடர்ந்து விஜய் மீது தவறான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளதால், விஜய்யிக்கு அவருடன் நெருங்கிய உறவில் இருக்கும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது தான் சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. அது யார் என்பதை விஜய் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் அந்த கருப்பு ஆடு ஆதவ் ஆர்ஜூனா தான் என்றும் விஜய் கண்டறிந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Previous articleவிஜய்யை முதல்வர் வேட்பாளராக்க திட்டம் தீட்டும் டிடிவி தினகரன்.. முழிக்கும் இபிஎஸ்.. குஷியில் விஜய்!!
Next articleதொடர் சர்ச்சையை எழுப்பிய விஜய்யின் பில்டப் அரசியல்.. பிரபல இயக்குனர் விஜய் மீது கடும் தாக்கு!!