
ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி அமைக்க தயார் என்று கூறிய அவர், கூட்டணி குறித்த முடிவை ஜனவரியில் பொங்கலுக்கு பின் தான் அறிவிப்போம் என்று உறுதியாக உள்ளார். இந்நிலையில் கரூர் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் ஏற்பட்ட கூட்டம் அரசியல் தலைவனை பார்க்க வந்த கூட்டம் அல்ல, நடிகரை பார்க்க வந்த கூட்டம் என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் கரூர் சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியலாக்குகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த சூழலில் அதிமுகவின் பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார். இது குறித்து இபிஎஸ்க்கு எதிரானவர்கள், விஜய்க்காக கொடி பிடிப்பது அதிமுக தொண்டர்கள் அல்ல இபிஎஸ் தான் என்று கூறி வருகின்றனர்.
ஏனேன்றால், புதிய கட்சியுடன் இபிஎஸ் இவ்வளவு இணக்கம் காட்டி வருவது, அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் அவமானமாக சிலர் கருதுகின்றனர். மேலும் கரூர் சம்பவத்திற்கு விஜய் மீதும் தவறு உள்ள பட்சத்தில், திமுக தனது அரசியல் என்ற ஒரே காரணத்தினால் இபிஎஸ் அனைத்து தவறையும் திமுக அரசு மீது சுமத்துவது, எடப்பாடி பழனிசாமி வீக் ஆகி விட்டார் என்பதற்கு எடுத்துக்கட்டாக இருக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர். இபிஎஸ்யின் இந்த செயல்முறை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் பலர் கூறிவருகின்றனர்.