
ADMK TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளையும், தேர்தல் வியூகங்களையும் வகுக்க தொடங்கிவிட்டது. அனைத்து தமிழக கட்சிகளும் மக்களை சந்தித்து அவர்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், அதனை ஏற்காத தவெக தரப்பு சிபிஐ விசாரணையை கோரி மனு தாக்கல் செய்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்ததுடன், சிபிஐ விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தவெக தலைவர் விஜய் மகிழ்ச்சியில் இருந்தார்.
ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பெரும்பாலும் மத்திய அரசின் கீழ் இயங்குவதால் தமிழக அரசின் பிடியிலிருந்து தப்பி மத்தியில் அரசின் சதி வலையில் மாட்டிக் கொண்டார் விஜய். இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதன் மூலம், பாஜக-அதிமுக கூட்டணியிலிருப்பதால் அதிமுக விஜய்யிடம் கூட்டணிக்கு நீங்கள் வந்து தான் ஆக வேண்டும். ஆனால் ஆட்சி பங்கோ, அதிக தொகுதிகளோ, முதல்வர் பதவியோ தர முடியாது என்று திட்ட வட்டமாக கூறியுள்ளது.
இல்லையென்றால் சிபிஐ விசாரணை உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது. இபிஎஸ், இதையெல்லாம் பாஜக மேலிடம் சொல்லி தான் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பது தான் அரசியல் சூழலில் பரபரப்பாக உள்ளது.