BJP: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி கூட்டணி வியூகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக கூட்டணி தற்போது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான் ஆர்வத்தை தூண்டியுள்ளது. திமுக அரசை தனது அரசியல் எதிரி என்று கூறி வந்த விஜய் திமுகவை கடுமையாக சாடி வருகிறார்.
மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வரும் இவர் கரூர் சம்பவத்திற்கு பிறகு பாஜகவுடன் இணக்கம் காட்டுவதாக தெரிகிறது. ஏனென்றால், கரூர் விவகாரத்தில் பாஜக அமைத்த குழுவை பற்றி விஜய் இது வரை எந்த கருத்தும் கூறவில்லை. மேலும் சிபிஐ விசாரணையை கோரியுள்ளார். இந்நிலையில் நேற்று கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிபிஐ பாஜகவின் கைப்பாவை என்று விஜய் விமர்சித்துள்ளார். ஆனால் கரூர் விவகாரத்தில் சிபிஐ வழக்கை கேட்டுள்ளார். மேலும் விஜய் பாஜகவின் பின்னணியில் தான் இயங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது என்று கேட்ட கேள்விக்கு, விஜய் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நம்புகிறார். அவர் அதையே பாலோ பன்னட்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சாரத்திற்கு இபிஎஸ் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பிய போது அதை பற்றி நாங்களே கவலைப்படவில்லை என்று ஆவேசமாக கூறினார்.
மேலும் அவர், பாஜகவிற்கு ஒரு பெரிய கூட்டணி வரபோகிறது, நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவரையே வைத்து கொள்ளுங்கள் என்று மரைமுகமாக கூறினார். இவர் இவ்வாறு கூறியது தவெகவை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். விஜய்க்கு பாஜக வலை வீசுகிறது என்ற கேள்விக்கு நாங்கள் யாருக்கும் வலை வீச வேண்டிய அவசியம் இல்லை. பாஜக அது போன்ற கட்சியும் கிடையாது என்று கூறி முடித்தார்.