DMK: தமிழகத்தில் டாஸ்மாக் தொடர்பான 25 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, 1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் கண்டறிந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதற்கான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு சில கேள்விகளையும் எழுப்பியது.
தலைமை நீதிபதி பி.ஆர். காவாய் இங்கு கூட்டாட்சி என்பது என்ன? மாநில அரசின் விசாரணை உரிமைகளை நீங்கள் பறிக்கவில்லையா? உங்களுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் மாநில அரசின் குற்றத்தை விசாரிக்கவில்லை என்று நினைத்து கொண்டு, நீங்கள் நேரடியாக விசாரிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் கடந்த 6 வருடங்களாக நான் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறேன். தற்போது இது குறித்து ஏதாவது சொன்னால், அது பெரிய செய்தியாகிவிடும் என்றும் கூறினார்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதிட்ட கபில் சிபில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறை ஏன் இடையில் நுழைகிறது என்று கேட்டார். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான அமலாக்கத்துறை வக்கீலான எஸ்.வி ராஜா மாநில அரசு ஏற்கனவே 47 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இருப்பினும், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது.
இதனால் இதனை அமலாக்கத் துறை விசாரிக்கலாம் என்றார். இதனை தொடர்ந்து இரு தரபிப்பினருக்கும் வாதங்கள் பெருகி கொண்டே போனதால் டாஸ்மாக் வழக்கை விசாரிக்க அமலாக்க துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு தற்போது மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியது.